சென்னை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு சமூக வலைதள ரீல்ஸ் வீடியோ மூலம் தமிழக தொழில்துறை அமைச்சர் Keerthana அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ரீல்ஸ் வீடியோவில், தமிழகம் எதிர்காலத்தை காத்திருக்காமல் அதனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். விரைவான தொழில் அனுமதிகள் முதல் செயற்கை நுண்ணறிவு, பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தித் துறைகள் மற்றும் விண்வெளி பொருளாதாரம் வரை பல புதுமை சார்ந்த உள்கட்டமைப்புகளை தமிழகம் உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் Vijay தலைமையில் தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் புதுமைகளின் முக்கிய மையமாக மாற்ற அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
“எதிர்காலம் இங்கேயே உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என்று அவர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் ரீல்ஸ் வீடியோவில் உறுதியளித்துள்ளார்.
