சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கடும் நடவடிக்கை: அமைச்சர் முரளிதரன் எச்சரிக்கை
Sabarimala Sree Ayyappa Temple கோவிலில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Muralidharan தெரிவித்துள்ளார்.
Keralaவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், Unnikrishnan Pothi முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் தேவஸ்வம் போர்டு அதிகாரிகளும் இந்த திருட்டு சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் இடது ஜனநாயக முன்னணி அரசு, சிலரை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், V. D. Satheesan தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இந்த வழக்கை தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் முரளிதரன் கூறுகையில், “கடவுளின் சொத்தை யார் திருடி இருந்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், “இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையையும் கவனித்து வரும் முரளிதரன், Ebola வைரஸ் பரவல் குறித்து மக்களுக்கு அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.
அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
