சென்னை: அமைச்சராக பதவியேற்ற பிறகு காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை கூறி கோஷம் எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரிடம், “அது உங்கள் உறுதிமொழியின் ஒரு பகுதி கிடையாது” என கவர்னர் C. P. Radhakrishnan கண்டிப்புடன் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டன. அதில் கிள்ளியூர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் ஒருவராக உள்ளார்.
பதவியேற்பு விழாவில், ஆண்டவன் மீது ஆணையிட்டு ராஜேஷ்குமார் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர், “பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க, ராஜிவ் காந்தி நாமம் வாழ்க, ராகுல் காந்தி நாமம் வாழ்க” என்று காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை கூறி கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து, கவர்னர் C. P. Radhakrishnan, “அது உங்கள் உறுதிமொழியின் ஒரு பகுதி கிடையாது” என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
