தேர்தல் தோல்வியால் ஆசிரமத்துக்கு குடிபெயர்ந்தார் பிரசாந்த் கிஷோர்
புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தியில் இருந்த ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் Prashant Kishor தற்போது ஆசிரமத்துக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த தோல்வி கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்த Prashant Kishor, தற்போது பாட்னா புறநகரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், “அடுத்த பீஹார் சட்டசபை தேர்தல் வரை எனது கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை இந்த ஆசிரமத்திலிருந்தே வழிநடத்துவேன். அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
மேலும், தேர்தலுக்கு பிறகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொருளாதார நெருக்கடியால் மக்களின் இடம்பெயர்வை தடுக்கவில்லை என்றும், தங்களது குடும்பத்தினருக்கு பதவிகளை பெற்றுக்கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
பீஹார் மக்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், “வாக்காளர்கள் ஜாதி, மதம் மற்றும் பணத்தின் அடிப்படையில் வாக்களிக்காமல், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து ஓட்டளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், Narendra Modi, Nitish Kumar மற்றும் Lalu Prasad Yadav போன்ற தலைவர்களால் மக்கள் திசைதிருப்பப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
“பீஹார் நாட்டின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், முதல்வர் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இல்லத்தில் வசிக்கிறார். அதன் பராமரிப்பு செலவுகளை சிந்தித்துப் பாருங்கள்” என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், துணை முதல்வரின் பங்களாவையும் முதல்வர் இல்ல வளாகத்துடன் இணைத்து விரிவுபடுத்த திட்டமிடப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், ஏழ்மையான மாநிலமாக இருந்தும் அரசு செலவுகள் அதிகரித்து வருவதாகவும் Prashant Kishor தெரிவித்துள்ளார்.
