நமது சிறப்பு நிருபர்
‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தொடர்பான பதிப்புரிமை வழக்கில், “ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும்; முழு பாடலுக்கும் உரிமை கோர முடியாது” எனக் கூறி Ilaiyaraaja தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் பதிப்புரிமை தொடர்பாக Ilaiyaraaja டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மே 21ஆம் தேதி நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காப்பிரைட் சட்டத்தின் அடிப்படையில், “ஒரு பாடலின் இசைப் பகுதிக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும். முழு பாடலுக்கும் உரிமை கோர முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் “இசைப் படைப்பு” என்ற வரையறையில் பாடல் வரிகள் அல்லது ஒலிப்பதிவுகள் சேராது என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, Ilaiyaraaja தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
