ரயில் தீவிபத்துகளுக்கு பின்னால் சமூக விரோதிகள்? ரயில்வே அமைச்சகம் சந்தேகம்
புதுடில்லி: சமீபத்தில் ரயில்களில் ஏற்பட்ட தீவிபத்துகளின் பின்னணியில் சமூக விரோத சக்திகளின் தொடர்பு இருக்கலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் சந்தேகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 17ஆம் தேதி, Madhya Pradesh மாநிலத்தின் ரத்லாம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் – நிஜாமுதீன் இடையே இயக்கப்பட்ட Rajdhani Express ரயிலின் ஏசி பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் Bihar மாநிலத்தில் சசாரம் – பாட்னா பயணிகள் ரயிலிலும் தீப்பற்றி எரிந்தது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பயணிகள் அலறியடித்து வெளியேறினர்.
பின்னர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவுராவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Mithila Express ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதில், ரயில் பெட்டிக்குள் பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணி ஒன்று பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சில சமூக விரோதிகள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும், ரயில்வே அமைப்பில் பயத்தை உருவாக்கவும் முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக Railway Protection Force மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
