சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், முதல்வர் விஜய்யின் அரசியல் வருகையை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றார். இந்த விவகாரம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்ததாகவும், தற்போது அது செயல்பாட்டிற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறி அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், விஜய்யை திரைப்பட நடிகராக மட்டும் பார்க்கக்கூடாது என்றும், அவருக்கு வேறு முக்கியமான கடமைகளும் இருப்பதாகவும் கமல் குறிப்பிட்டார்.
எந்தத் துறையில் இருந்தாலும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது என்றும், திரைப்படத் துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்திருப்பது பெருமையாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவு செய்தார்.
