தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றார்.
இன்று காலை தொடங்கிய 17வது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாளை காலை சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அவர் பேரவைச் செயலகத்தில் தேவையான ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் மற்ற கட்சிகளுக்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
