சென்னை: துணை முதல்வர் Udhayanidhi Stalin தாக்கல் செய்த சொத்து விபரங்கள் தொடர்பான வழக்கில், விசாரணையை தொடர வருமானவரி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஆர்.குமாரவேல் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி சமர்ப்பித்த தற்போதைய சொத்து விபரங்கள் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த விபரங்களில் முரண்பாடுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமானவரி துறையின் சார்பில் ஆஜரான சட்ட அதிகாரிகள், “தற்போது உதயநிதியின் வருமானவரி கணக்கு விவரங்கள் மட்டுமே எங்களிடம் உள்ளன. கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க மேலும் அவகாசம் தேவை” என்று தெரிவித்தனர்.
இதனை ஏற்ற நீதிமன்றம், வருமானவரி துறைக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.
