சென்னை: அரசியல் அழுத்தங்களாலும் அதிகாரங்களாலும் தன்னை மிரட்ட முடியாது என்றும், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்காளர்கள் “விசில் புரட்சிக்குத்” தயாராக வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் Vijay தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், தமிழக மக்களிடம் நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், அரசியலுக்கு வந்ததிலிருந்து பல நெருக்கடிகள் மற்றும் நிர்பந்தங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் எதிரிகள் தன்னை அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாகவும், ஆனால் எந்த அழுத்தத்திற்கும் தாழ்ந்து விட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்ததாக கூறிய விஜய், “அதிகாரங்களை பயன்படுத்தி என்னை மிரட்ட முடியாது; எந்த லாபத்தாலும் என்னை அடக்க முடியாது” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் தங்களை நம்பி அளித்த ஆதரவே தனது முக்கிய பலம் என்றும், எந்த அரசியல் சக்தியும் தன்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, தேர்தல் நாளில் குடும்பம் குடும்பமாக வந்து வாக்களிக்க வேண்டும் என்றும், விசில் சின்னத்திற்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
