திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு Bharatiya Janata Party தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
எடப்பழஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜ மாநில தலைவர் Rajeev Chandrasekhar, தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் Tushar Vellappally ஆகியோருடன் இணைந்து, பாஜ தேசிய தலைவர் Nitin Gadkari தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 மதிப்பிலான கூப்பன் (உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு அட்டை) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பனை பயன்படுத்தி மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களை பெற முடியும்.
மேலும், ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது ஆண்டுக்கு 2 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெண்கள், விதவைகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும், விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் தொடர்பாக, திருவனந்தபுரம்–கண்ணூர் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்றும், திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் புதிய மெட்ரோ சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி துறையில், அரசு பள்ளிகளில் விருப்பப் பாடமாக ஆங்கில வழிக் கல்வி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத மற்றும் சுற்றுலா தளங்களைப் பாதுகாக்க, சபரிமலை மற்றும் குருவாயூர் கோவில்களின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், சபரிமலை தொடர்பான விவகாரங்களில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஊக்கத் திட்டம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
