சென்னை: திமுக மற்றும் தவெக இடையே மட்டுமே போட்டி நடைபெறுகிறது என நடிகர் Vijay கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என தமிழக பாஜ தலைவர் Nainar Nagendran விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், “பிரதமர் Narendra Modi குறித்து தவறாக பேசியவர்களுக்கு திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக மற்றும் அதன் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார்.
மேலும், “சவுக்கு சங்கர் தமிழகத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, Indira Gandhi காலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர நிலையை நினைவுபடுத்துகிறது. அதுபோன்ற சூழல் தற்போது தமிழகத்திலும் நிலவுகிறது. இந்த நிலை ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடையும்,” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, “திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறுவது தவறு. எங்கள் கூட்டணி, Edappadi K. Palaniswami தலைமையில் முன்னர் ஆட்சி செய்துள்ளது. எதிர்காலத்திலும் எங்கள் கூட்டணியே ஆட்சி செய்யும். விஜய் இவ்வாறு பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது,” என நயினார் நாகேந்திரன் கூறினார்.
