காட்பாடி: வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு இருந்தபோதிலும், அமைச்சர் துரைமுருகன் தனது தேர்தல் பிரசாரத்தை காட்பாடி தொகுதியில் தொடங்கினார்.
தி.மு.க. பொதுச் செயலராக உள்ள துரைமுருகன், வேலூர் மாவட்டத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்டவர். காட்பாடி தொகுதியில் 10 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை என மொத்தம் 12 தேர்தல்களில் போட்டியிட்டு, 10 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னையில் இருந்து ரயிலில் காட்பாடி வந்த அவர், திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று பிரசாரத்தை துவக்கினார். அவருடன் அவரது மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர் ஆனந்தும் இருந்தார்.
ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக முதல் நாளிலேயே அவர் உரையாற்ற சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், துரைமுருகனின் வயது காரணமாக இந்த முறை அவருக்கு சீட் வழங்கப்படாத நிலை இருந்ததாகவும், பின்னர் அவரது அரசியல் செல்வாக்கால் சீட் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
சமீப காலமாக அவர் நீண்ட பயணங்களுக்கு கார் பயணத்தை தவிர்த்து ரயிலில் பயணித்து வருகிறார். மேலும், கோடை கால வெப்பம் அதிகமாக இருக்கும் வேலூர் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரம் அவருக்கு சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
