புதுடில்லி: அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றத்தின் தாக்கம், இந்தியாவின் விமானப் போக்குவரத்திலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக, கோடை கால விமான சேவையில் 10 சதவீதம் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் கோடை கால அட்டவணையில், வாரத்திற்கு 25,600க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாரத்திற்கு சுமார் 2,560 விமான சேவைகள் குறைக்கப்பட்டு, புதிய அட்டவணைப்படி 23,049 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் சர்வதேச சூழ்நிலைகளால் உருவான சவால்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
