அதிமுக கூட்டணியில் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.)க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக அதிமுக கூட்டணியில் பாஜகுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவற்றிற்கும் இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். எந்த தொகுதிகள் மற்றும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பான அறிவிப்பு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
