N. Rangasamy, புதுச்சேரி முதல்வராக 5வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், All India N.R. Congress தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என். ரங்கசாமி இன்று முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் Nitin Nabin உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி ஆளுநர் Kailashnathan, என். ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, பிரதமர் Narendra Modi தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு என். ரங்கசாமி அவர்களுக்கு வாழ்த்துகள். புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்திய அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிர்வாகியாக அவர் திகழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்கள் நலனுக்காக அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
