Srinagar: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக, Umer Ahmed Ilyasi தெரிவித்துள்ளார்.
அகில இந்திய இமாம் அமைப்புகளின் தலைமை இமாமான அவர் கூறுகையில், “370 நீக்கத்திற்குப் பிறகு காஷ்மீர் முழுமையாக மாறியுள்ளது. புதிய காஷ்மீர் உருவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது” என்றார்.
மேலும், சுற்றுலா வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், காஷ்மீர் வக்ப் வாரியம் முன்னுதாரணமாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் விரைவில் இந்தியாவுடன் இணையும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், “போர் யாருக்கும் நல்லது அல்ல. மேற்காசியாவில் நடைபெறும் போர் பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியஸ்தம் செய்து அதை முடிவுக்கு கொண்டு வருவார்” எனவும் கூறினார்.
குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய Article 370-ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டு நீக்கியது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
ஆனால், இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படும் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்த சட்ட நீக்கத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
