சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் உயரிய விருதுகளை அதிக அளவில் பெற்ற தலைவர்களில் ஒருவராக புதிய சாதனையை படைத்துள்ளார். இதுவரை 33 சர்வதேச உயரிய விருதுகளை பல்வேறு நாடுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
அண்மையில் ஸ்லோவாக்கியா, ஸ்வீடன், இஸ்ரேல் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் தங்களது உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கியதைத் தொடர்ந்து, அவர் பெற்றுள்ள சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
2026
- தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ் – ஸ்லோவாக்கியா
- ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ் – ஸ்வீடன்
- ஸ்பீக்கர் ஆப் தி நீசெட் மெடல் – இஸ்ரேல்
- கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் – நார்வே
2025
- ஆர்டர் ஆப் ஓமன் – ஓமன்
- கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா – எத்தியோப்பியா
- தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் – நமீபியா
- கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ் – பிரேசில்
- தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் & டொபாகோ
- தி ஆபிஸர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா – கானா
- கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் III – சைப்ரஸ்
- மித்ர விபூஷண விருது – இலங்கை
- கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன் – மொரீஷியஸ்
2024
- ஹானரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ் – பார்படாஸ்
- தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் – குவைத்
- தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ் – கயானா
- தி டொமினிகா அவார்ட் ஆப் ஹானர் – டொமினிகா
- தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர் – நைஜீரியா
- ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் – ரஷ்யா
- ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ – பூடான்
2023
- கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர் – கிரீஸ்
- கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் – பிரான்ஸ்
- ஆர்டர் ஆப் தி நைல் – எகிப்து
- கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹூ – பிஜி
- எபாக்ல் விருது – பலாவு
2020
- லீஜியன் ஆப் மெரிட் – அமெரிக்கா
2019
- கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனசான்ஸ் – பஹ்ரைன்
- ஆர்டர் ஆப் சையத் – ஐக்கிய அரபு அமீரகம்
- ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்குவிஷ்டு ரூல் ஆப் நிஷான் இசுதீன் – மாலத்தீவு
2018
- கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன் – பாலஸ்தீனம்
2016
- ஸ்டேட் ஆர்டர் ஆப் காஸி அமீர் அமானுல்லா கான் – ஆப்கானிஸ்தான்
- தி கிங் அப்துல் அஸீஸ் சாஷ் – சவுதி அரேபியா
பல்வேறு நாடுகள் வழங்கிய இந்த உயரிய கவுரவங்கள், இந்தியாவின் உலகளாவிய உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றன
