15 லட்சம் புத்தகங்கள் சேகரித்த அன்கே கவுடாவுக்கு பத்மஸ்ரீ விருது
Droupadi Murmu தலைமையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில், கர்நாடகத்தைச் சேர்ந்த Anke Gowda பெற உள்ள பத்மஸ்ரீ விருது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
1949ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி Mandya district மாவட்டத்தின் சின்னகுரலி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அன்கே கவுடா, மிக எளிய பொருளாதார சூழலில் வளர்ந்தார். உதவித்தொகைகள் மற்றும் இலவச உணவுத் திட்ட உதவியுடன் தனது கல்வியை முடித்தார்.
பின்னர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தாலும், கல்வி மற்றும் புத்தகங்களின் மீது கொண்ட ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. மாலை நேரக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், தொலைதூரக் கல்வி மூலம் கன்னடத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
மைசூர் பல்கலைக்கழக அச்சகத்தில் பயிலும் காலத்தில் புத்தகங்களின் மீது அவருக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது கிடைத்த தினசரி 5 ரூபாய் வருமானத்தில் கூட சிறிய புத்தகங்களை வாங்கத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அவரது சிறிய வீட்டிலேயே புத்தகங்கள் சேமிக்கப்பட்டன. பின்னர், வீட்டு முழுவதும் புத்தகங்கள் நிரம்பியதால், தனி நூலகம் அமைக்கும் எண்ணம் உருவானது.
அவரது அர்ப்பணிப்பை கண்டு ஈர்க்கப்பட்ட தொழிலதிபர் Srihari Kode, கடந்த 2005ஆம் ஆண்டு நிலம் வாங்கி பெரிய நூலகக் கட்டிடம் கட்ட உதவி செய்தார். தற்போது ‘அன்கேகவுடா புத்தக மனே’ என அழைக்கப்படும் இந்த நூலகம், இந்தியாவின் மிகப்பெரிய இலவச நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த நூலகத்தில் தற்போது 15 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை வாங்குவதற்காக தனது சம்பளத்தின் பெரும்பகுதியை செலவிட்டதோடு, சில சமயங்களில் வீட்டு பொருட்களையே விற்று புத்தகங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.
அவரது நூலக சேவைக்காக பல விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அதில் கர்நாடக ராஜ்யோத்சவா விருது, கன்னட புத்தக ஆணைய விருது மற்றும் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கவை.
புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்ததற்கும், நூலகத் துறையில் செய்த அசாதாரண பங்களிப்பிற்கும் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அன்கே கவுடாவுக்கு வழங்கப்பட உள்ளது.
