டெஹ்ரான்: மேற்காசியாவின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நோக்கி சென்ற “செலன்” என்ற கச்சா எண்ணெய் கப்பலை Iran தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. இந்த முக்கிய கடல் பாதை ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
United States மற்றும் Israel மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின், இந்த ஜலசந்தியை Iran கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் China உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் குறைந்த அளவில் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கி வருகிறது.
மேலும், சமீபத்தில் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு ரூ.18.8 கோடி கட்டணம் வசூலிக்கும் முறையையும் ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதி போர் செலவுகளுக்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், “செலன்” என்ற கப்பல் அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்றதாக கூறி, ஈரான் புரட்சிகர ராணுவம் அதை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்தது. பின்னர் அந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதிக்கே திரும்பியது.
இந்த சம்பவத்தை Iran தூதரகம் காபூலில் உறுதி செய்துள்ளது.
