வேலூர்: வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே, அனுமதியின்றி செயல்பட்டதாக கூறப்படும் ஒரு சர்ச், பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அதிகாரிகளால் மூடப்பட்டது.
சேண்பாக்கத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதி, பக்தர்களின் வருகை அதிகம் உள்ள இடமாகும். அந்த பகுதியில் அனுமதி பெறாமல் ஒரு கட்டிடம் சர்ச் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிலர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று காலை அங்கு அனுமதியின்றி பிரார்த்தனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் செயல்பட்ட சர்ச் மூடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், கோவில் அருகே இனி அந்த இடத்தில் சர்ச் செயல்படாது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக கூறினர்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
