காத்மாண்டு: Nepal நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற இளந்தலைமுறையினரின் போராட்டத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், 27 மாணவர்கள் உட்பட மொத்தம் 76 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், மாணவர் அமைப்பின் ஆதரவுடன் செயல்பட்ட தேசிய சுதந்திர கட்சி பெரும்பான்மையை பெற்றது. அதன் தலைவர் Balen Shah புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் K. P. Sharma Oli மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், கூடுதல் நிவாரணத் தொகை வழங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது.
