புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான Rahul Gandhi அரசியல் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் Piyush Goyal விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் Dharmendra Pradhan மற்றும் ராகுல் காந்தி இடையே கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், பியூஷ் கோயல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி உண்மைகளை விட பொய்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், அவர் விமர்சித்து வரும் கேஎம்ப்ட் நிறுவனத்திற்கே காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அந்த நிறுவனத்துடன் பல்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என அவர் பட்டியலிட்டுள்ளார்.
பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம், கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், ஆதிகவி ஸ்ரீ மகரிஷி வால்மீகி பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடகா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஒப்பந்தங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த நிறுவனம் உண்மையில் தவறானது என்றால், அதனுடன் ஒப்பந்தம் செய்த காங்கிரஸ் ஆட்சி மாநிலங்களின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி எவ்வாறு நியாயப்படுத்துவார் என்றும், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களிடம் ராஜினாமா கேட்பாரா என்றும் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த ஒப்பந்தங்கள் குறித்து காங்கிரஸ் அரசுகள் அறியாமலேயே செயல்பட்டனவா அல்லது மத்திய அரசுக்கு எதிரான அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியாக நடந்தனவா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
