மதத்தை பார்த்து ஓட்டு போட்டீர்களா? அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை
தூத்துக்குடி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் Rahul Gandhi குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக விமர்சனத்திற்கு உள்ளான திமுக முன்னாள் அமைச்சர் Anitha Radhakrishnan, தற்போது மதம் தொடர்பாக பேசியதன் மூலம் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்ற Anitha Radhakrishnan, சமீபத்தில் உடன்குடியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசியபோது பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது, “முதல்வராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் மக்கள் கேடு கெட்டவர்கள்” என பேசியதாக கூறப்பட்டது. மேலும், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சட்டையை கிழிப்போம்” என ஆவேசமாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து துரோகம் செய்துவிட்டனர் என்றும், Rahul Gandhi முகத்தில் மக்கள் கரியை பூசுவார்கள் என்றும் அவர் பேசியதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மணப்பாடு மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டங்களில் அவர் பேசிய கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அவர், “நான் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லை; ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன். அப்படி சொன்னால்தான் நீங்கள் ஓட்டு போடுவீர்கள். திமுக மதத்தையோ ஜாதியையோ பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் மதத்தை பார்த்து ஓட்டு போட்டுவிட்டீர்களே” என பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், “ஜோசப் என்றவுடன் தவெகவுக்கு ஓட்டு போட்டுவிட்டீர்கள். கிறிஸ்துவர்கள் வசிக்கும் இடங்களில் ஜோசப் விஜய் என்றும், இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் விஜய் என்றும் தற்போதைய முதல்வர் பேசி வாக்கு கேட்டார்” என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக “நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்” என கூறியிருந்த Anitha Radhakrishnan, தற்போது மதத்தை சுட்டிக்காட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி, தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரைட்டர், திருச்செந்தூர் டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
