சென்னை: பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் என்றும், மே மாதத்திற்கான ரூ.1000 தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் Vijay அறிவித்துள்ளார்.
சட்டசபையில் முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.1000 இன்று வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையும் வழக்கம்போல் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்திருந்தது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் திட்ட பயனாளிகள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
