கரப்பான்பூச்சி ஜனதா இயக்கம் நடத்தி வரும் போராட்டங்களின் பின்னணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயல்படுகின்றன என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினையை ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்ததாகவும், பின்னர் அது அரசியல் நோக்கத்திற்காக திசைதிருப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், போராட்டங்களில் பங்கேற்கும் இளைஞர்களை நோக்கி, இந்தியா வலிமையான மற்றும் கல்வி வளம் நிறைந்த நாடாக வளர்வதை சில உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகள் விரும்பவில்லை என்றும், நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.
போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவற்றை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியா ஆயிரக்கணக்கான புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியால் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் நாட்டிற்கு நல்லதை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் எந்த வகையிலும் நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.
