பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டார் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த நபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெந்தார் துணைப் பிரிவுக்கு உட்பட்ட பாலகோட் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர், சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைக்குள் நுழைந்த ஒருவரை பிடித்தனர்.
விசாரணையில், அவர் பாகிஸ்தானின் பக்தூன் பகுதியைச் சேர்ந்த பாஜியா ஜடா கானின் மகன் ரயீஸ் கான் என்பது தெரியவந்துள்ளது.
அவர் எந்த நோக்கத்திற்காக இந்திய எல்லையை தாண்டி வந்தார், யாரை சந்திக்க முயன்றார், பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
