பாட்னா: பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்.
இதற்கு முன்பு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக நீண்ட காலமாக பதவி வகித்து வந்தார். கடந்த 21 ஆண்டுகளாக மாநில அரசியலில் முக்கிய பங்காற்றிய அவர், முதல்வராக தொடர்ந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சாம்ராட் சவுத்ரியின் தலைமையில், பீகார் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் திரும்பியுள்ளது.
