Narendra Modiயை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Marco Rubio நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, நான்கு நாள் அரசு முறைப் பயணமாக கடந்த சனிக்கிழமை இந்தியா வந்தார். அவர் முதலில் Kolkata சென்றார்.
அங்கு, மறைந்த Mother Teresa தொடங்கிய ஆதரவு இல்லங்களின் தலைமையகமான Mother Houseக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து, New Delhi சென்ற மார்கோ ரூபியோ, பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா – அமெரிக்கா உறவுகள் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தினார்.
இந்த சந்திப்பில், இருநாடுகளுக்கிடையேயான பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், Donald Trump சார்பில், விரைவில் White Houseக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ள மார்கோ ரூபியோ, அடுத்ததாக Jaipur மற்றும் Agra நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Hillary Clintonக்கு பிறகு, அந்தப் பதவியில் உள்ள ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
