ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய தகவலை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய விமானப்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆவணத்தின் படி, பிரான்ஸுடன் 2016-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்ட அனைத்து 36 ரஃபேல் போர் விமானங்களும் தற்போது முழுமையாக சேவையில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் 5 ரஃபேல் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்ட பராமரிப்பு ஆவணத்தில் அனைத்து 36 விமானங்களுக்கும் தொழில்நுட்ப ஆதரவு, பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், எந்த ரஃபேல் விமானமும் இழக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இந்த ஆவணம், ரஃபேல் விமானங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதையும், அவற்றின் பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
