நியூயார்க்: பலூசிஸ்தான் விடுதலைப் படை (BLA) மற்றும் அதன் தற்கொலைப் படை பிரிவான மஜீத் பிரிகேடை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கும் முயற்சிக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வரும் Balochistan Liberation Army, 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு பலூச் பழங்குடியின தலைவர்கள் மற்றும் இளைஞர்களால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் மூலம் தங்களது நிலங்கள் பாதிக்கப்படுவதாக கருதும் இந்த அமைப்பு, பலூசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம், சீனப் பொறியாளர்கள் மற்றும் சீன நலன்கள் சார்ந்த இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த சூழலில், Pakistan மற்றும் China இணைந்து, பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மஜீத் பிரிகேடு பிரிவை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைத்தன.
ஆனால், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான United States, France மற்றும் United Kingdom ஆகிய நாடுகள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.
