சென்னை: Thiruparankundram Murugan Temple கோவிலில் அமைச்சர் நிர்மல் குமார் தரிசனத்திற்கு சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்து அடுத்த வாரம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், த.வெ.க. அமைச்சரான நிர்மல் குமார், Thiruparankundram Murugan Temple கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு, மதிய நேரத்தில் கோவில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டதாக கூறப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேலும், அமைச்சர் மூலஸ்தானத்தில் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, ஆகம விதிமுறைகளை மீறி அமைச்சர் தரிசனத்திற்காக கோவில் நடை தாமதமாக சாத்தப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு இந்த சம்பவம் குறித்து அடுத்த வாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
