சென்னை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்ல் அமைச்சர் Nirmal Kumar தரிசனம் செய்தபோது, கோவில் நடை தாமதமாக அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கடந்த மே 15ம் தேதி சென்றார். வழக்கமாக கோவில் நடை மதியம் 12:45 மணிக்கு சாத்தப்படும் நிலையில், அன்றைய தினம் அமைச்சரின் தரிசனத்திற்காக நடை திறந்துவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் தரிசனம் முடிந்த பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சர் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ததாக கூறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த சூழலில், கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் G. R. Swaminathan மற்றும் V. Lakshminarayanan அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, “அமைச்சர் நிர்மல்குமார் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றபோது அங்கு என்ன நடந்தது?” என்பது குறித்து அறநிலையத் துறை செயலர் அடுத்த வாரம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
