மாஸ்கோ: அமெரிக்க அதிபர் Donald Trump சீனா பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் Vladimir Putinவும் இரண்டு நாள் அரசு முறை பயணமாக மே 19ஆம் தேதி China செல்ல திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த மே 13ஆம் தேதி மூன்று நாள் பயணமாக சீனாவுக்கு சென்றார். அங்கு சீன அதிபர் Xi Jinpingயை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த பயணத்தில் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களும் டிரம்புடன் சென்றிருந்தனர்.
டிரம்பின் பயணத்தின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிய நிலையில், அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பினார்.
இந்நிலையில், டிரம்பின் பயணத்தை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடினும் சீனா செல்ல உள்ளார். மே 19ஆம் தேதி தொடங்கும் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, ரஷ்யா மற்றும் சீனா இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் சீனா பயணத்தை தொடர்ந்து புடினும் அங்கு செல்வதால், இந்த பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
