நாட்டில் சமஸ்கிருதத்தை பரவலாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் Mohan Bhagwat வலியுறுத்தியுள்ளார்.
சமஸ்கிருத பாரதி அமைப்பின் புதிய மத்திய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சமஸ்கிருதத்தின் பயன்பாடு அதிகரிப்பது மற்ற அனைத்து இந்திய மொழிகளையும் செழுமைப்படுத்துவதோடு, அவற்றுக்கிடையே பாலமாக செயல்படுகிறது என்றும், மக்களை தொன்மையான சிந்தனை மற்றும் கலாசாரத்துடன் இணைக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், “பாரதம் என்பது வெறும் புவியியல் அடையாளம் அல்ல; அது ஒரு மரபு, வாழ்க்கை தொடர்ச்சியை தாங்கும் அடித்தளம். உயிருள்ளதும் உயிரற்றதும் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு பரந்த பாரம்பரியம் ஆகும்” என்று அவர் கூறினார்.
இந்த மரபை உலகம் தொடர்ந்து தேவைப்படுகின்றது என்றும், அதை முன்னெடுத்து செல்லுவது இந்தியர்களின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள சமஸ்கிருதத்தை அறிதல் அவசியம் என்றும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் தனித்துவம் வாய்ந்த தேசிய மொழி எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பல்வேறு மொழிகளை இணைக்கும் இணைப்பாக சமஸ்கிருதம் செயல்படுகிறது என்றும், நாட்டில் சமஸ்கிருதத்தை மேலும் பரவலாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என Samskrita Bharati அமைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஒவ்வொரு இந்தியரும் சமஸ்கிருதத்தில் உரையாடக்கூடிய நிலையை அடையும் வரை இந்த முயற்சிகள் முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமல்ல; இந்தியாவுக்குப் பொறுத்தவரை அது தேசத்தின் உயிர்நாடி” என அவர் உரையாற்றினார்.
