Sunrisers Hyderabad அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, Chennai Super Kings ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகள் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், Rajasthan Royals அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 243/8 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் பல்வேறு மீம்கள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கான முக்கிய காரணமாக, சமீபத்தில் சேப்பாக்கில் நடைபெற்ற போட்டி பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றபோது, வீரர் Ishan Kishan சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி “வீட்டிற்கு செல்லுங்கள்” என்ற வகையில் விசில் அடித்து கேலி செய்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சிஎஸ்கே ரசிகர்கள், தற்போது சன்ரைசர்ஸ் தோல்விக்குப் பிறகு “கர்மா சும்மா விடாது” என்றும், “இப்போது நீங்களே வீட்டிற்கு செல்லுங்கள்” என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
