சென்னை: ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) குறித்து விமர்சித்த Tamilisai Soundararajan, “அந்த கட்சியை பிரதமர் Narendra Modi ‘ஹிட்’ வைத்து அடித்துவிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Supreme Court of India தலைமை நீதிபதி Surya Kant வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்ட கருத்துக்கு எதிர்வினையாக சமூக வலைதளங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே தொடங்கிய இந்த சமூக ஊடகப் பக்கத்தை கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழிசை செளந்தரராஜன், “இளைஞர்கள் மீது குறை கூறக் கூடாது. அவர்கள் இன்று ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றனர்” என்று கூறினார்.
மேலும், “சமீபத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறார்” என்றும் அவர் தெரிவித்தார்.
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சி. இதை உண்மையான இளைஞர்களின் குரலாக நான் நம்பவில்லை. கரோனா போன்ற பெரும் சவால்களையே எதிர்கொண்ட பிரதமர், கரப்பான் பூச்சியையும் சமாளிப்பார்” என்றும் தமிழிசை கூறினார்.
