தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தில் பேசிய உதயநிதி, மாநில அரசின் முன் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை தீர்ப்பதற்கு பதிலாக மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூறிய கருத்தை நினைவுகூர்ந்த அவர், “குதிரை பேரம் நடைபெறுகிறது” என்று பேசத் தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “குதிரை பேரம், கழுதை பேரம் போன்ற வார்த்தைகளை பேசுவதற்கான இடம் சட்டசபை அல்ல. ஆதாரம் இல்லாமல் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க அனுமதிக்க முடியாது. தயவுசெய்து அடுத்த விஷயத்திற்கு செல்லுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
