காங்கோவில் தீவிரமாக பரவி வரும் Ebola நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா அவசரகால மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது.
Congo மற்றும் Uganda உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்பதால், World Health Organization உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள எபோலா பரவலை கட்டுப்படுத்த காங்கோ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அவசர மருத்துவப் பொருட்களில் நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இவை பெறப்பட்டதை Africa Centres for Disease Control and Prevention உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மருத்துவப் பொருட்கள் விரைவாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்திய அரசும் மக்களும் வழங்கிய உதவிக்காக ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் நன்றி தெரிவித்துள்ளது.
உயிர்களை பாதுகாப்பதற்கும் உலக சுகாதார பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் அந்த அமைப்பு பாராட்டியுள்ளது.
