சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தரராஜ், மக்கள் நீதி மய்யம் தலைவர் Kamal Haasan அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மா.கம்யூ மாநில செயலர் சண்முகம் உடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுந்தரராஜின் வெற்றிக்காக கமல் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தங்களின் மீது கமலுக்கு நல்ல புரிதல் இருப்பதாக கூறிய சண்முகம், கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு அவரிடம் கோரிக்கை வைத்தார்.
