உலகின் முன்னணி தொழில்நுட்பம், நிதி, மருந்து, ஃபேஷன் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (CEO) தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அந்த வரிசையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய நிறுவனங்களில் இந்தியர்களின் தலைமைப் பங்கு மேலும் வலுப்பெற்றுள்ளது.
தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களில் மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா, ஆல்பபெட் (கூகுள்) நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, CHANEL நிறுவனத்தின் லீனா நாயர், FEDEX நிறுவனத்தின் ராஜ் சுப்ரமணியம், NETAPP நிறுவனத்தின் ஜார்ஜ் குரியன், ப்ளெக்ஸ் நிறுவனத்தின் ரேவதி அத்வைதி, நோவார்டிஸ் நிறுவனத்தின் வசந்த் நரசிம்மன், BARCLAYS நிறுவனத்தின் சி.எஸ். வெங்கடகிருஷ்ணன், ஹனிவெல் நிறுவனத்தின் விமல் கபூர், மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிகேஷ் அரோரா, அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஜெயஸ்ரீ உல்லால், ஸ்னோப்ளேக் நிறுவனத்தின் ஸ்ரீதர் ராமசுவாமி, பி&ஜி நிறுவனத்தின் ஷைலேஷ் ஜெஜூரிகர் மற்றும் யூடியூப் நிறுவனத்தின் நீல் மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலகளாவிய நிறுவனங்களில் இந்தியர்களின் தலைமைப் பொறுப்புகள், இந்திய திறமைகளின் சர்வதேச அங்கீகாரத்தையும், உலக வணிகத்தில் அவர்களின் செல்வாக்கையும் வெளிப்படுத்துகின்றன.
