இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க விருப்பம்: யுஏஇ அதிபர்
நடுவானில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் மற்றும் பிளைதுபாய் விமான நிறுவனத்தின் பணியாளர்களின் துணிச்சலைப் பாராட்டி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார்.
இதற்கிடையே, யுஏஇ அதிபருக்கும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
அந்தக் காணொளியில், ஸ்மிட் மச்சாரின் உடல்நிலை குறித்து அதிபர் விசாரிக்கிறார். “நீங்கள் எப்போது குணமடைவீர்கள்?” என்று அவர் கேட்க, இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என மச்சார் பதிலளிக்கிறார்.
இதற்குப் பதிலளித்த யுஏஇ அதிபர், “எனக்கு ஒரு யோசனை இருக்கிறது. நீங்கள் குணமடைந்ததும், எப்படி சண்டையிடுவது என்று உங்களுக்குப் போர் பயிற்சி அளிக்க விரும்புகிறேன்” என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட ஸ்மிட் மச்சார், “இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்” என நெகிழ்ச்சியுடன் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சமூக வலைதளங்களில் பரவிய மற்றொரு காணொளியில், யுஏஇ அதிபர் ஸ்மிட் மச்சாரைக் கட்டித்தழுவி, அவரது தலையில் உள்ள தையல்களைப் பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காணொளிகளைப் பலரும் பகிர்ந்து, இந்திய விமானி மற்றும் விமானக் குழுவினரின் துணிச்சலைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
