புதுடெல்லி: இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில், கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள D. K. Shivakumar ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து Siddaramaiah விலகியதைத் தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் வரும் 3-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். இதையடுத்து, தேர்தல் வேட்புமனுக்களில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின் அடிப்படையில் ஏடிஆர் அமைப்பு பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின்படி, டி.கே.சிவக்குமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதில் ரூ.1,140 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.273 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் அடங்கும். அதேநேரத்தில், அவருக்கு ரூ.265 கோடி கடனும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் N. Chandrababu Naidu உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் தமிழக முதல்வர் Vijay உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.648 கோடி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காவது இடத்தில் Pema Khandu ரூ.332 கோடி சொத்துகளுடன் இடம்பெற்றுள்ளார்.
டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி அவரின் குடும்ப பாரம்பரிய நிலங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் உருவானவை என கூறப்படுகிறது. அவரது தந்தை மற்றும் பாட்டியிடம் இருந்து கிடைத்த நிலங்கள் தற்போது அவரது பெயரில் உள்ளன. மேலும், பெங்களூரு, மைசூரு, கனகபுரா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் உள்ளன. பெங்களூருவின் கோபல்புரா பகுதியில் வணிக வளாகமும் அவருக்கு சொந்தமாக உள்ளது.
கடந்த இரு தசாப்தங்களில் பெங்களூருவில் நிலங்களின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால், டி.கே.சிவக்குமாரின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் பட்டியல்
பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலில் Leema Rose முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.5,863 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த Parag Shah உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.3,383 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியலிலும் டி.கே.சிவக்குமார் இடம்பெற்றுள்ளார்.
