சிவகங்கை: “நாம் எதற்கு ஆயிரம் ரூபாய், இரண்டு ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை வழங்குவேன்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் Seeman தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: நீ இப்போது தான் காதலிக்கிறாய், நான் 15 ஆண்டுகளாக காதலித்து கத்திக் கொண்டிருக்கிறேன். என் காதலை புரிந்தால் நான் வெற்றி பெறுவேன் என்றார்.
மேலும், நான் நீண்ட நாட்களாக ஒன் சைடு லவ்லேயே இருக்கிறேன். ஒருவர் ரூ.2,000 கொடுக்கிறேன் என்கிறார். நான் ஒரு வீட்டிற்கு ஹெலிகாப்டர் கொடுக்கிறேன் என சொன்னால் மக்கள் நம்பாமல் சிரிக்கிறார்கள். அவர் சொன்னால் நம்புகிறார்கள், நான் சொன்னால் சிரிக்கிறார்கள் என்று விமர்சித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரம், வெளிநாட்டு தேன்நிலவு பயணம் போன்ற வாக்குறுதிகளையும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடஇந்தியர்கள் இங்கு வேலைக்கு வர தேவையில்லை என்றும், உள்ளூர் மக்களுக்கு திறன் மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன் என்றும் கூறினார். டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என்றும், இனி மதுபான விற்பனை இருக்காது என்றும் தெரிவித்தார்.
“உழைத்து களைத்து வரும் மக்களுக்கு பனம்பால், தென்னம்பால் போன்ற இயற்கை பானங்களை வழங்குவோம்” என்றும் சீமான் தனது பேச்சில் கூறினார்.
