கொல்கட்டா: மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் காலை பிரார்த்தனை கூட்டங்களில் தேசப்பாடலான ‘வந்தே மாதரம்’ கட்டாயம் பாடப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அனைத்து பள்ளிகளும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதை வீடியோ மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு, மேற்கு வங்க பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டங்களில் தேசிய கீதமான ‘ஜன கண மன’ மட்டுமே பாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
