மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியானது என்றும், அந்த திட்டத்திற்கு ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் ஆரம்பம் முதலே தெளிவான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக கூறினார்.
பிரதமரை சந்தித்தபோதும், சட்டப்பேரவையிலும் மேகதாது அணை குறித்து தமிழகத்தின் எதிர்ப்பை முதல்வர் விஜய் தெளிவாக பதிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், “மேகதாது அணையைப் பொறுத்தவரை ஒரு செங்கல்லை கூட அங்கு வைக்க தமிழக அரசு அனுமதிக்காது. சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முதல்வர் விஜய் மேற்கொள்வார்” என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்தார்.
