புதுடில்லியில் பிரதமர் Narendra Modiயை, இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் Delcy Rodríguez சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியா – வெனிசுலா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், எரிசக்தி பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, மருந்துத்துறை, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த பயணத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இதற்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S. Jaishankar, டெல்சி ரோட்ரிக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வெனிசுலாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து டில்லியில் பிரதமர் மோடியை டெல்சி ரோட்ரிக்ஸ் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் Vikram Misri ஆகியோரும் உடனிருந்தனர்.
