திருப்பரங்குன்றத்தில், மலை மீது தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவிற்கு, ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சென்றனர்.
வழக்கமான பாதுகாப்பு நடைமுறையின் ஒரு பகுதியாக, மலைக்கு செல்லும் முன் பக்தர்களின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய போலீசார் முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், ஆண்டுதோறும் அமைதியாக தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் நாளில் இவ்வாறு தடுத்து நிறுத்தி தனித்தனியாக அனுப்புவது சரியல்ல என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த போலீஸ் உதவி கமிஷனர் சசி பிரியா, இது புதிய நடைமுறை அல்ல, வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை என்றும், பதிவு செய்த பிறகே அனைவரும் அனுப்பப்படுவார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்த பின் மலைக்கு சென்று, நெல்லித்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர்.
