சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக இழுபறி நிலவி வந்தது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது.
இதற்கு முன் கடும் பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இதையடுத்து நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் முடிவில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதில் 4 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பே ஒரு தொகுதியை இழந்துள்ளது.
2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் வருமாறு:
-
காங்கிரஸ் – 28 தொகுதி (3 அதிகம்)
-
முஸ்லிம் லீக் – 2 தொகுதி (1 குறைப்பு)
-
ம.ம.க – 2 தொகுதி (அதே நிலை)
-
ம.தி.மு.க – 4 தொகுதி (2 குறைப்பு)
-
கொமதேக – 2 தொகுதி (1 குறைப்பு)
-
இந்திய கம்யூனிஸ்ட் – 5 தொகுதி (1 குறைப்பு)
