திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு!
சென்னை: திமுக எம்எல்ஏ சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படும் புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கடந்த 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.
அப்போது, சேகர்பாபு, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர் போலீசாரைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வாசலில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக, சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாகப் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
